/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழாஅரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா
அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா
அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா
அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா
ADDED : ஜன 13, 2024 04:09 AM

கடலுார் : கடலுார் அரசு பெரியார் கல்லுாரியின் மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா நடந்தது.
கடலுார் அரசு பெரியார் கல்லுாரியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் கோலப் போட்டி, கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி நடந்தது. பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரிசளிப்பு விழாவில், விடுதி காப்பாளர் சுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி, போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
பேராசிரியர்கள் கவிதா, கீதா, சுமித்ரா, புவனேஸ்வரி, கண்காணிப்பாளர் மாலதி, விடுதி பணியாளர்கள் சாந்தி, ஜெயலட்சுமி, கங்கா, சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.