ADDED : ஜன 31, 2024 02:06 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவர், அப்பியம்பேட்டையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். கடந்த, 24ம் தேதி, கடனை திருப்பி கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், காசிநாதனை, ஆபாசமாக திட்டி கண்ணன் தாக்கினார். காயமடைந்த காசிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.