
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளராக மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் மனோகர். இவரை பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் பரிந்துரைப்படி, முதல்வர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் நியமித்துள்ளனர். மனோகருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.