ADDED : செப் 17, 2025 12:22 AM

புவனகிரி; புவனகிரி நகர ம.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நடந்தது.
தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், சுந்தர், அருணாச்சலம், ஆனந்தராஜ் முன்னிலையில், அண்ணாதுரை சிலைக்கும், கட்சி அலுவலகத்தில் உள்ள படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முருகன், சுப்ரமணி, முருகவேல், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். முரளி நன்றி கூறினார்.