ADDED : மார் 18, 2025 06:18 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், சிறப்பு ரத்தசோகை தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மங்கலம்பேட்டை வட்டார மருத்துவர் ராமநாதன் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழு டாக்டர் சுகன்யா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாணவிகள் அனைவருக்கும் ரத்தசோகை உள்ளதா என சோதனை செய்தனர்.
பின்னர், மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் தமிழரசி, ெஹலன் ரூத் ஜாய்ஸ், ஆனந்தன், வேல்விழி, அனிதா உட்பட சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.