/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அன்புமணி நடைபயணம் : திரளானோர் பங்கேற்பு அன்புமணி நடைபயணம் : திரளானோர் பங்கேற்பு
அன்புமணி நடைபயணம் : திரளானோர் பங்கேற்பு
அன்புமணி நடைபயணம் : திரளானோர் பங்கேற்பு
அன்புமணி நடைபயணம் : திரளானோர் பங்கேற்பு
ADDED : செப் 11, 2025 03:31 AM

கடலுார்: கடலுாரில் பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோ ர் பங்கேற்றனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, கடலுார் மஞ்சக்குப்பத்தில் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி.,தனராசு, தலைமை நிலைய செயலாளர் செல்வக்குமார், கிழக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் வைத்தி, மாநில தேர் தல் பணிக்குழு தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தர்மா, தமிழரசன், போஸ் ராமச்சந்திரன், விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று அன்புமணி, கடலுார் தேவனாம்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.