/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது கடலுாரில் அன்புமணி ஆவேசம் தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது கடலுாரில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது கடலுாரில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது கடலுாரில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது கடலுாரில் அன்புமணி ஆவேசம்
ADDED : ஜூன் 21, 2025 01:00 AM

கடலுார்: கடலுாரில் மாவட்ட பா.ம.க.,ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அன்புமணி பேசியதாவது:
தமிழக மக்களின் உரிமைகளை மீட்கும் நடைபயணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த ஜூலை 25ம் தேதி துவங்குகிறது. ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது. பா.ம.க., துவங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. பா.ம.க.,வை ஆளும் கட்சியாக மாற்ற வேண்டியதை கடமையாக பார்க்கிறேன். பா.ம.க., வில் குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கிறது.
குரு இருந்திருந்தால் குழப்பம் வந்திருக்காது. பா.ம.க., நடத்திய போராட்டங்களால் தான் கடலுார் மாவட்டத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் துவங்கினால் முதல்வருக்கு கோபம் வரும்.
மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கம் துவங்கினால் வர விடாமல் வீரவசனம் பேசுவார். கடலுார் மாவட்டத்தில் மண்ணையும், மக்களையும் அழிக்கும் என்.எல்.சி.,மீது கோபம் வராதது ஏன். கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் தி.மு.க., 7 தொகுதிகளில் வென்றது.
வரும் தேர்தலில் ஒரு தொகுதி கூட வெல்லக் கூடாது. பா.ம.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் 9 தொகுதியும் வெற்றி பெற வேண்டும். பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றியவர் முதல்வர் ஸ்டாலின்.
வள்ளலார் பெருவெளியில் கை வைத்தால், அதன் விளைவை வரும் தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம். விவசாயத்தில் விளைச்சலும் இல்லை, தகுந்த விலையும் இல்லை. இன்னும் எட்டுமாதத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்.
விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். என்.எல்.சி.,யால் பாதிக்கப்படும் கரிவெட்டி பிரச்னை இரண்டு நாளில் தீர்க்க வேண்டும். இல்லையெனில் நான் களத்திற்கு வருவேன். எத்தனை வஜ்ரா வாகனம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது.
கடலுார் மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரிக்காக நாட்டப்பட்ட அடிக்கல் கூட காணவில்லை. மதுரையில் எய்ம்ஸ் கல்லை கொண்டு வந்த தி.மு.க.,வினர் நட்ட கல்லை யார் கண்டுபிடிப்பது? எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க., என்.எல்.சி., விவகாரத்தில் மட்டும் கைகோர்த்து செல்வது ஏன். இதற்கெல்லாம் விடை வரும் சட்டசபை தேர்தலில் கிடைக்கும். தி.மு.க.,ஆட்சியை அகற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.