/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'அன்புக்கரங்கள் திட்டம்' கடலுாரில் துவக்கி வைப்பு 'அன்புக்கரங்கள் திட்டம்' கடலுாரில் துவக்கி வைப்பு
'அன்புக்கரங்கள் திட்டம்' கடலுாரில் துவக்கி வைப்பு
'அன்புக்கரங்கள் திட்டம்' கடலுாரில் துவக்கி வைப்பு
'அன்புக்கரங்கள் திட்டம்' கடலுாரில் துவக்கி வைப்பு
ADDED : செப் 16, 2025 07:08 AM

கடலுார் : கடலுாரில், 'அன்புக்கரங்கள்' திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு ள்ள 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.
'தாயுமானவர்' திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'அன்புகரங்கள்' திட்டத்தை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதனையொட்டி கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சிபி ஆத்தியா செந்தில்குமார் தலைமை தாங்கி, இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 221 குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், துணை மேயர் தாமரைச்செ ல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எல்லப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.