/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2025 06:53 AM

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயசங்கர், சக்கரவர்த்தி, இணை செயலாளர்கள் கோவிந்தராஜீலு, அன்பழகன், போராட்டக்குழு தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் ஏழுமலை, இணை செயலாளர் குமாரசாமி, மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேஷன்கடைகளில் ப்ளூடூத் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யும் முறையை நீக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அனைத்துப் பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.