/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., நிர்வாகி இல்ல நிச்சயத்தார்த்த விழா அ.தி.மு.க., நிர்வாகி இல்ல நிச்சயத்தார்த்த விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல நிச்சயத்தார்த்த விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல நிச்சயத்தார்த்த விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல நிச்சயத்தார்த்த விழா
ADDED : செப் 01, 2025 02:56 AM

புவனகிரி: எம்.ஜி.ஆர்., மன்ற மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், கீரப்பாளையம் தாதம்பேட்டையைச்சேர்ந்த அண்ணா ராமலிங்கம் இல்ல திருமண நிச்சயதார்த்த விழா புவனகிரியில் நடந்தது.
அண்ணா ராமலிங்கம் தம்பி ராஜா நடராஜன் - மாலா இவர்களின் மகள் பொறியாளர் கமலி. முன்னாள் ராணுவ வீரர் சிதம்பரம் லால்புரத்தைச் சேர்ந்த மனோகர்-கிரிஜா இவர்களின் மகன் பொறியாளர் கிரிதரன். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் புவனகிரியில் நடந்தது.
விழாவில், மணமகள் தந்தை ராஜா நடராஜன் வரவேற்றார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் (மேற்கு) அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., (கிழக்கு) பாண்டியன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் அருளழகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர்கள் (மேற்கு) உமா மகேஸ்வரன், (கிழக்கு) கானுார் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் பிரபு உட்பட பலர் பங்கேற்ற மணமக்களை வாழ்த்தினர். அண்ணா ரமலிங்கம் நன்றி கூறினார்.