அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 05, 2025 03:14 AM
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமத்தில் அகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மகா கும்பாபி ேஷகம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமம் அகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த 2ம் தேதி விக்னேஸ்வரி பூஜை, சரஸ்வதி ஹோமத்துடன் துவங்கியது. 3ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, அங்குரார்பணம், மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை கோ பூஜை, தன பூஜை, கடம் புறப்பாடாகி கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.