Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளர் நல நிதி தொகையை 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுரை

தொழிலாளர் நல நிதி தொகையை 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுரை

தொழிலாளர் நல நிதி தொகையை 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுரை

தொழிலாளர் நல நிதி தொகையை 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுரை

ADDED : ஜன 13, 2024 04:11 AM


Google News
கடலுார்: தொழிலாளர் நலநிதி தொகையை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென, கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின்படி 5 அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக 20 ரூபாய், ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக 40 ரூபாய் என மொத்தம் 60 ரூபாய் வீதம் தொழிலாளர் நல நிதியை நிர்வாகம் செலுத்த வேண்டும்.

நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 31ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா தொகைகள் இருப்பின் அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கீடு செய்து, தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் நல நிதியை வரும் 31ம் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 'The Secretary, TamilNadu Labour Welfare Board, Chennai-600006' என்ற பெயருக்கு வரைவோலை அல்லது காசோலை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us