/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீஸ்காரரை மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைதுபோலீஸ்காரரை மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
போலீஸ்காரரை மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
போலீஸ்காரரை மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
போலீஸ்காரரை மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஜன 13, 2024 07:30 AM
பண்ருட்டி : போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலைமணி,44; அ.தி.மு.க., நகர இளைஞரணி பொருளாளர். இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி ரயில்வே சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் கையில் இரும்பு பைப்புடன் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டார். அதனை ரோந்து சென்ற போலீஸ்காரர் அன்பரசன் கண்டித்தார்.
ஆத்திரமடைந்த கலைமணி, போலீஸ்காரர் அன்பரசனை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து, கலைமணியை கைது செய்தனர்.