கலைமகள் பள்ளியில் மாணவர் சேர்க்கை
கலைமகள் பள்ளியில் மாணவர் சேர்க்கை
கலைமகள் பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : அக் 06, 2025 01:49 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
நிர்வாக இயக்குனர் நவநீத முத்துக்குமரன், புதிய மாணவர்களுக்கு நெல்லில் அ... எழுதி கல்வி பயணத்தை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


