ADDED : செப் 18, 2025 11:15 PM

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஊழியர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், தலைவராக கபில்தேவ், பொதுச் செயலாளராக ரகு, பொருளாளராக பாரி உள்ளிட்ட 60 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்