/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல் ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ADDED : செப் 16, 2025 11:56 PM

ராமநத்தம்; ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை மற்றும் டார்ச் சலைட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் அமைந்துள்ளது.
மாவட்டத்தின் கடைகோடியிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளதால், அதிக விபத்துகள் மற்றும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.
இதனால், காவலர்களின் பாதுகாப்பு கருதி, இந்திய தபால் துறையில் 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு அட்டை மற்றும் இரவு ரோந்து பணிக்காக டார்ச் லைட் ஆகியவற்றை ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.