/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிபிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : ஜன 04, 2024 03:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆர்வமூட்டலுக்கான கல்லுாரி களப்பயண நிகழ்ச்சி துவங்கியது.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ரூத் ஜாய்ஸ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையார்கள் விருத்தாசலம் செந்தில்குமார், கம்மாபுரம் கோபாலகிருண்ணன்முன்னிலை வகித்தனர்.
இதில், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர் பரமசிவம், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல்பெருமான், புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு, உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். நாளை (5ம் தேதி) வரையில் பயிற்சி நடக்கிறது.
பேராசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விருத்தாசலம் வட்டார பிளஸ் 2 மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நான் முதல்வன் திட்ட அலுவலர் தமிழ் வேல் நன்றி கூறினார்.