Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அப்துல்கலாம் பிறந்த நாள்

அப்துல்கலாம் பிறந்த நாள்

அப்துல்கலாம் பிறந்த நாள்

அப்துல்கலாம் பிறந்த நாள்

ADDED : அக் 16, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை கண் மருத்துவர் கேசவன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார், கவுரவ தலைவர் இளங்கோவன், அப்துல்கலாம் படத்தை திறந்து வைத்து பேசினார்.

தொடர்ந்து, ஆசிரியை ஆரோக்கியசெல்வி தலைமையில் கவியரங்கம் நடந்தது. ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, தமிழ்நாடு செந்தமிழ் இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜா, நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் சத்யராஜ்மோகன், அருள்ஒளி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

பாரதிதாசன் இலக்கிய மன்றம் பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு மன்றத்தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். துர்கா பயிற்சி கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். மன்ற செயலர் கலைச்செல்வி வரவேற்றார். கடலுார் மாநகராட்சி மண்டலத்தலைவர் சங்கீதா செந்தில், அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொலைபேசி அலுவலர் (ஓய்வு) இளங்கோ வன் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சுசான்லி குரூப்ஸ் தலைவர் டாக்டர் ரவி பரிசுகளை வழங்கினார்.பலராம் பாஸ்கர் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us