/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆதார் சிறப்பு முகாம் 16ம் தேதி துவக்கம் கடலுார் கோட்ட அஞ்சல் துறை ஏற்பாடு ஆதார் சிறப்பு முகாம் 16ம் தேதி துவக்கம் கடலுார் கோட்ட அஞ்சல் துறை ஏற்பாடு
ஆதார் சிறப்பு முகாம் 16ம் தேதி துவக்கம் கடலுார் கோட்ட அஞ்சல் துறை ஏற்பாடு
ஆதார் சிறப்பு முகாம் 16ம் தேதி துவக்கம் கடலுார் கோட்ட அஞ்சல் துறை ஏற்பாடு
ஆதார் சிறப்பு முகாம் 16ம் தேதி துவக்கம் கடலுார் கோட்ட அஞ்சல் துறை ஏற்பாடு
ADDED : ஜூன் 13, 2025 03:39 AM
கடலுார்: அஞ்சல் துறையின் ஆதார் சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி துவங்கி ஒரு மாத காலம் நடக்கிறது என கடலுார் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை கடலுார் கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் பல்வேறு பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்களில் வரும் 16ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களில் நடக்கிறது.
சிறப்பு மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகிறது. ஆதாரில் திருத்தம் செய்ய 50 ரூபாய் கட்டணமும், ஆதார் புதுப்பிக்க 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு புதியதாக ஆதார் எடுக்க எந்த கட்டணமும் இல்லை. பொதுமக்கள் தங்கள் கிராமங்களிலோ அல்லது நகரிலோ ஆதார் சிறப்பு முகாம் தேவைப்படுமானால் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 80984 48183 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் திருத்தம் செய்தல், புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் எடுக்க, தங்களின் உரிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.