/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணாடம் பள்ளியில் ஆதார் திட்ட சிறப்பு முகாம்பெண்ணாடம் பள்ளியில் ஆதார் திட்ட சிறப்பு முகாம்
பெண்ணாடம் பள்ளியில் ஆதார் திட்ட சிறப்பு முகாம்
பெண்ணாடம் பள்ளியில் ஆதார் திட்ட சிறப்பு முகாம்
பெண்ணாடம் பள்ளியில் ஆதார் திட்ட சிறப்பு முகாம்
ADDED : பிப் 25, 2024 05:02 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'பயிலும் பள்ளியிலேயே ஆதார்' திட்டம் சிறப்பு முகாம் நடந்தது.
நல்லுார் வட்டார வள மையம் சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சற்குணாம்பிகை தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆதார் பதிவு நகல் உடனே வழங்கப்பட்டது. 30 நாட்களில் ஒரிஜினல் கிடைக்கும் என்றனர்.