/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு
நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு
நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு
நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு
ADDED : மார் 24, 2025 06:16 AM

கடலுார் : டாஸ்மாக் கடையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட நண்பனை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு, போலீசார் மாவுக்கட்டு போட்டனர்.
கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த கருங்குழி காலனியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மூட்டைப்பூச்சி (எ) சம்பத்குமார், 36; இவர், நேற்று முன்தினம் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த, அவரது நண்பரான மேலகொளக்குடியை சேர்ந்த ராஜகுரு, 33; கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார், ராஜகுருவை ஆபாசமாக திட்டி, கத்தியால் தலையில் வெட்டினார். இதுகுறித்து வடலுார் இன்ஸ்பெக்டர் இளவழகி வழக்கு பதிந்து விசாரித்தார். அதில், ரவுடி பட்டியலில் உள்ள சம்பத்குமார் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 37 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வீட்டில் பதுங்கியிருந்த சம்பத்குமாரை, போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். ஜீப்பில் போலீசார் அழைத்து வந்தபோது, கருங்குழி தனியார் பாலிடெக்னிக் அருகே சம்பத்குமார் தப்பித்து செல்ல பாலத்தில் இருந்து கீழே குதித்தார். அதில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டது. வடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.