/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பகலில் எரியும் மின்விளக்கு விரயமாகும் மின்சாரம் பகலில் எரியும் மின்விளக்கு விரயமாகும் மின்சாரம்
பகலில் எரியும் மின்விளக்கு விரயமாகும் மின்சாரம்
பகலில் எரியும் மின்விளக்கு விரயமாகும் மின்சாரம்
பகலில் எரியும் மின்விளக்கு விரயமாகும் மின்சாரம்
ADDED : மே 31, 2025 05:10 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் பகலிலும் தெரு மின்விளக்குகள் எரிவதால் மின்சாரம் விரயமாகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஏராளமான தெரு மின்விளக்குள் உள்ளன. இதனை பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் இல்லை.
ஒப்பந்த பணியாளர்கள் மூலமே விளக்குகளை எரிய வைக்கவும், நிறுத்தவும் வேண்டிய நிலை இருந்தது. இவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் மின்விளக்கை நிறுத்த முடியாததால் மின் கட்டணம் அதிகமானது.
இதனை தவிர்க்க கடந்த ஒரு ஆண்டிற்கு முன் பல லட்சம் செலவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி சுவிட்ச் வைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தானாகவே சுவிட்ச் இயங்கி மின்விளக்கு எரிய துவங்கி விடும்.
காலை 6:00 மணிக்கு தானாகவே மின்விளக்கள் நின்று விடும். இதனால் ஊழியர்கள் தேவை இல்லாததோடு மின் கட்டணமும் குறைந்தது. ஆனால் கந்தசாமி தெரு, அண்ணாமலை தெரு உள்ளிட்ட இடங்களில் தானியங்கி சுவிட்ச் பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக பகலிலும் மின்விளக்கு எரிந்து கொண்டே இருப்பதால் மின்சாரம் விரயமாகிறது.
இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். உடனடியாக தானியங்கி சுவிட்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.