ADDED : ஜன 10, 2024 11:15 PM
கடலுார்: சோழதரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடை செய்ய உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை சேர்ந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழதரம், நந்தீஸ்வர மங்கலம், பாளையங்கோட்டை, சின்னகானுார் ஆகிய பகுதி கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, சோழதரத்தில் 2 கடைகள், பேரூர், நந்தீஸ்வரமங்கலம், சின்னகானுார், ஆகிய இடங்களில் தலா ஒரு கடை, பாளையங்கோட்டையில் 3 கடைகள் என, 8 பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் 8 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.