ADDED : ஜூன் 06, 2025 08:05 AM

சேத்தியாத்தோப்பு,; சோழதரம் அருகே குட்கா பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழத்தரம் போலீசார் நேற்று முன்தினம் நந்தீஸ்வரமங்கலம், வட்டத்துார், பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட கடைவீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நந்தீஸ்வரமங்கலம் ரோட்டுத்தெரு பிரகாஷ்,39; வட்டத்துார் ரவிச்சந்திரன்,45; பாளையங்கோட்டை கீழ்பாதி அருண்குமார்,49; சோழத்தரம் மணிமாறன்,32; ஆகியோர் அவரவர் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கியது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.