/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கள்ள நோட்டு வழக்கில் 3 பேருக்கு 'குண்டாஸ்' கள்ள நோட்டு வழக்கில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
கள்ள நோட்டு வழக்கில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
கள்ள நோட்டு வழக்கில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
கள்ள நோட்டு வழக்கில் 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 02, 2025 11:58 PM

கடலுார்: ராமநத்தம் கள்ளநோட்டு வழக்கில், மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்,35; இவர் மீதான அடிதடி வழக்கு தொடர்பாக ராமநத்தம் போலீசார், கடந்த மார்ச் 31ம் தேதி அவரது பண்ணை வீட்டிற்கு விசாரிக்க சென்றனர். அங்கு, சோதனை நடத்திய போலீசார், 86,000 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் எந்திரம், நோட்டுகள் எண்ணும் எந்திரம், காவலர் சீருடை, லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வம்,35; கல்லுார் கிராமம் பிரபு,32; வல்லரசு,25; பெரம்பலுார் மாவட்டம், பீல்வாடி கிராமம் ஆறுமுகம்,25; பெரியசாமி,36; ஆடுதுறை கிராமம் சூர்யகுமாரன்,26; ஆகியோரை கைது செய்தனர். அதில், செல்வம், பிரபு, வல்லரசு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
எஸ்.பி., ஜெயகுமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, இவ்வழக்கில் கடலுார் மத்திய சிறையில் உள்ள ஆறுமுகம், பெரியசாமி, சூர்யகுமாரன் ஆகிய மேலும் மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.