கடலுாரில் 27ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு
கடலுாரில் 27ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு
கடலுாரில் 27ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு
ADDED : செப் 01, 2025 06:53 AM

கடலுார் : மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவின் 27ம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை லட்சுமண ராமானுஜ சுவாமி கருடக்கொடி ஏற்றினார். ஸ்ரீஅரவிந்தன் சுவாமி முன்னிலை வகித்தார். மணவாள மாமுனிகள் கைங்கரிய சபா ஸ்ரீதர் ராமானுஜதாசன் வரவேற்றார். பொருளாளர் வெங்கடேசன் ஆண்டறிக்கை மற்றும் மாநாட்டறிக்கை வாசித்தார்.
திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி மங்களாசாசனம் செய்தார். காலை 10:00 மணிக்கு, தேரழுந்துார் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வித்வான் ஸ்ரீரங்கம் ஸ்ரீபாஞ்சராத்ர பிரவர்த்தகர் ஸ்ரீராமன் பட்டச்சாரியார் சுவாமி 'ஆகமத்தில் ஆனந்தன்' தலைப்பில் பேசினார்.
சென்னை ஸ்ரீநிவாசசார்யர் சுவாமி திருநாம வைபவம் பற்றியும், துாத்துக்குடி இளையவில்லி சடஜித் சுவாமி 'கள்ளனும் குள்ளனும்' தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
பிற்பகல் 1:30 மணிக்கு நெல்லிக்குப்பம் ஸ்ரீகோதண்டராமன் சன்னதி ராம பக்த பஜனைக் குழுவினரின் ஹரிநாம பஜனை நடந்தது.
ஸ்ரீரங்கம் சாரதி தோதாத்ரி சுவாமி, ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் தலைப்பிலும், வானமாமலை வகுளாபரணன் சுவாமி கொண்டாட்டம் தலைப்பிலும் பேசினார். மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை துரையன் ஒருங்கிணைத்தார்.