/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : ஜன 08, 2025 08:22 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் வீட்டின் பின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி, வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,55. இவர், திட்டக்குடி பஸ் நிலையத்தில் பேக்கரி வைத்துள்ளார்.
நேற்று காலை 4:30 மணியளவில் ரவிச்சந்திரன் மனைவி ராஜேஸ்வரி எழுந்து, வாசலில் கோலம் போட்டு விட்டு, பின்பக்க கதவை பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பூஜை அறையில் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 20 சவரன் நகைகள், 50 ஆயிரம் பணம் கொள்ளைபோனது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மோப்பநாய் வெற்றி, வீட்டின் பின்புறத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரமுள்ள வெள்ளாற்றின் நடுபகுதி வரை ஓடி நின்றது. போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.