ADDED : ஜூன் 30, 2025 04:14 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் நேற்று கம்மாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி, 39; என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து, அக்பர் அலி மற்றும் குட்கா வினியோகம் செய்த திருப்பூர் முத்துக்கோபால் தெருவைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 45; ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.