/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலிபைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
ADDED : ஜன 15, 2024 06:54 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி; 16வது வார்டு தி.மு.க., பேரூராட்சி கவுன்சிலர். இவரது கணவர் தாமோதரகண்ணன், 55; இவர், நேற்று முன்தினம் இரவு, தஞ்சை மாவட்டம், வல்லம் பொறியியல் கல்லுாரியில் படித்து வந்த தனது மகள் மினிஷாவை பொங்கல் விடுமுறைக்காக, பைக்கில் அழைத்து வந்தார்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், வீரானந்தபுரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, எதிரில் ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ், 21; தனது நண்பர் விக்கி, 19; என்பவருடன் பைக்கில் சென்றார். இரு பைக்குகளும், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், படுகாயமடைந்த தாமோதரகண்ணன்,55; மற்றும் மற்றொரு பைக்கை ஓட்டி வந்த கவிதாஸ், 21, இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காயமடைந்த மினிஷா, 19, மற்றொரு பைக்கில் அமர்ந்து வந்த விக்கி, 19, ஆகியோர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர், உயிரிழந்த தாமோதர கண்ணன், கவிதாஸ் உடல்களை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


