/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது
காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது
காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது
காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது
ADDED : மே 24, 2025 07:16 AM
கடலுார், : ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து 300 கிலோ எடையுள்ள காப்பர் ஒயரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காப்பர் ஒயரை திருடியதாக புதுச்சேரி, ஒதியம்பேட்டை சேர்ந்த மணிமாறன், 30; என்பவரையும், பழைய இரும்புக்கடை வியாபாரியான முருங்கப்பாக்கம் குமரவேல்,47; என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இவர்களிடம் இருந்து 60 கிலோ எடையுள்ள காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.