/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீடு புகுந்து திருட முயற்சி 2 பேர் கைதுவீடு புகுந்து திருட முயற்சி 2 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி 2 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி 2 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி 2 பேர் கைது
ADDED : ஜன 25, 2024 04:45 AM
திட்டக்குடி : திட்டக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி கூத்தப்பன்குடிகாடு மசூதி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி ரோகிணி,31. இவர், வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் அதிகாலை 2:30மணியளவில், இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை இரும்பு ராடு கொண்டு உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.
ரோகிணி சத்தம் போட்டதால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, இருவரையும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், செந்துறை அடுத்த நமங்குணம் கிராமத்தை சேர்ந்த விஜய்,21, திருவண்ணாமலை, சிங்காரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ்,28, என தெரிந்தது.
இதுகுறித்து ரோகிணி அளித்த புகாரில், திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.