/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., மாவட்ட செயலாளருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது வி.சி., மாவட்ட செயலாளருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
வி.சி., மாவட்ட செயலாளருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
வி.சி., மாவட்ட செயலாளருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
வி.சி., மாவட்ட செயலாளருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 09:45 PM
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் வி.சி.க. மாவட்ட செயலாளர் கார் மீது மோத முயன்றதால் ஏற்பட்ட பிரச்னையில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வி.சி., மாவட்ட செயலாளர் மணவாளன்,50; வந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது அவரது காரில் மோதுவது போல் வந்த மற்றொரு காரை நிறுத்தி ஏன் வேகமாக வருகிறீர்கள் என கேட்டபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமுஷ்ணம் அடுத்த புதுக்குப்பத்தைச்சேர்ந்த ஸ்டீபன், ஸ்ரீமுஷ்ணத்தைச்சேர்ந்த கணேசன், பிரகாஷ், தினேஷ், நரேஷ், லியோ ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன்,25;, கணேசன்,25; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.