/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகை திருட்டுஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகை திருட்டு
ADDED : பிப் 25, 2024 05:22 AM

நெய்வேலி : நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் 16 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீ சார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 9, காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராமன், 60; என்.எல்.சி., நகர நிர்வாகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு மந்தாரக் குப்பத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றார். இரவு வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு திறந்து கிடந்தததை கண்டு அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 16 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
நெய்வேலியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
நெய்வேலியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.