ADDED : மார் 15, 2025 12:42 AM
விருத்தாசலம்; பெற்றோர் சண்டையை சமாதானம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் இறந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் சின்னையன் மகன் சிலம்பரசன், 29; நேற்று முன்தினம் இரவு, இவரது தந்தை சின்னையன், தாய் வசந்தா ஆகியோர் இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது, இருவரையும் சமாதானம் செய்த சிலம்பரசனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்ககள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.