/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:08 AM
கடலுார், : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் சம்மேளனம் சார்பில், கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலுார் பொறுப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட நிர்வாகிகள் குளோப், நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, பாலசந்தர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகிகள் கலைராஜா, பாக்கியம், அரிகிருஷ்ணன், வடிவேல், பாலு, வீரப்பன், செல்வம், ஜெகதீசன், ஆனந்த், அபினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜெயசீலன் நன்றி கூறினார்.