/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கள்ளச்சாராய விற்பனையா? தகவல் தெரிவிக்கலாம் கள்ளச்சாராய விற்பனையா? தகவல் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராய விற்பனையா? தகவல் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராய விற்பனையா? தகவல் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராய விற்பனையா? தகவல் தெரிவிக்கலாம்
ADDED : ஜூலை 10, 2024 04:43 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் கள்ளச்சாரத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலுார் பஸ் நிலையம், சிக்னல்கள் உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.
அதில், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள் மற்றும் கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், காவல்துறை மதுவிலக்கு பிரிவுக்கு 7418846100, வருவாய்த்துறை 9080731320, சென்னை கட்டுப்பாட்டு அறை 10581 (கட்டமில்லா எண்) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போர் குறித்து ரகசியம் காக்கப்படும் என, அச்சிடப்பட்டுள்ளது.