Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் கட்டுப்படுமா?

கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் கட்டுப்படுமா?

கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் கட்டுப்படுமா?

கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் கட்டுப்படுமா?

ADDED : ஜூலை 20, 2024 05:17 AM


Google News
பெண்ணாடம்; வடகரை கால்நடை மருத்துவமனைக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என, கால்நடை வளர்ப்போர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கால்நடைத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் தற்காலிகமாக கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டது. இதன் மூலம் வடகரை, நந்திமங்கலம், கோனுார், தாழநல்லுார், அருகேரி, எரப்பாவூர் உட்பட 10 கிராம மக்கள் தங்களின் ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்குதல் மற்றும் உடல் நிலை பாதிப்பு ஏற்படும் போது அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாததால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் ஆடு, மாடுகள் உயிரிழக்கும் என கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்து வருகின்றனர்.

எனவே, வடகரை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us