ADDED : மார் 12, 2025 06:38 AM
கவுன்சிலர் கீதா குணசேகரன் பேசும்போது, கடலுார் பகுதிக்கு பஸ் நிலையம் எங்கு அமைக்கப்படுகிறது என்பது குழப்பமாக உள்ளது. தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
அதற்கு மேயர் சுந்தரி ராஜா பதிலளித்து பேசுகையில், கடலுார் எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க 2 முறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. அங்கு, பஸ் நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் உள்ள அதிகாரிகள்தான் அனைத்தும் செய்து வருகின்றனர். அங்கு அமைந்தால் மாநகராட்சி பகுதி விரிவடையும், நான்கு வழிச்சாலை அதன் வழியாக செல்கிறது என்றார்.
துணை மேயர் பேசுகையில், எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் பஸ் நிலையம் கொண்டுவரவேண்டும் என விரும்புகின்றனர் என்றார்.