/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெலிங்டன் பாசன வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை வெலிங்டன் பாசன வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
வெலிங்டன் பாசன வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
வெலிங்டன் பாசன வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
வெலிங்டன் பாசன வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 05:42 AM

பெண்ணாடம் : திருமலை அகரம் வழியே செல்லும் வெலிங்டன் பாசன வாய்க்காலை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், அரியராவி, பூவனுார், செம்பேரி, இருளம்பட்டு, மாளிகைக் கோட்டம் சின்னகொசப்பள்ளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி பாசன வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
அதில், திருமலை அகரத்தில் இருந்து பெ.பூவனுார் செல்லும் பாசன வாய்க்காலில் சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டியுள்ளதால் வெலிங்டன் ஏரியில் தண்ணீர் திறக்கும்போது, பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் கரை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயமாகும் நிலை உள்ளது.
எனவே, திருமலை அகரம் பகுதியில் உள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.