/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மைசூர் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு மைசூர் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
மைசூர் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
மைசூர் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
மைசூர் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
ADDED : ஜூலை 20, 2024 05:21 AM

சிதம்பரம்: சிதம்பரம் வந்த மைசூர் விரைவு ரயிலுக்கு பொது மக்கள் பூக்கள் துாவி வரவேற்றனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில், பல்வேறு முக்கிய ரயில்கள் நிறுத்தப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து, சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் விரைவு ரயிலை கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என, தொடர் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றியது.
நேற்று முதல் கடலுார் துறைமுகத்தில் இருந்து மைசூர் ரயில் புறப்பட்டது. மாலை 4:10 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த மைசூர் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.
சிதம்பரம் வர்த்தக சங்கம், ரயில் பயணிகள் சங்கத்தினர், அரசு, தனியார் துறை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் மலர் துாவி வரவேற்பு அளித்தனர்.
ரயில் பயணிகள் நல சங்க தலைவர் அப்துல் ரியாஸ், தலைமையில் துணைத் தலைவர் சிவராம வீரப்பன், அம்பிகாபதி, காங்., பொதுக்குழு உறுப்பினர் ராதா, நகர தலைவர் மக்கின், வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி உட்பட பலர் மைசூர் விரைவு ரயிலை மலர் துாவி வரவேற்றனர்.