/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வீணாகும் விழிப்புணர்வு பலகைகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வீணாகும் விழிப்புணர்வு பலகைகள்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வீணாகும் விழிப்புணர்வு பலகைகள்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வீணாகும் விழிப்புணர்வு பலகைகள்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வீணாகும் விழிப்புணர்வு பலகைகள்
ADDED : ஜூன் 04, 2024 06:37 AM

கடலுார், : கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசக பலகைகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் செயல்பட்டு வருகின்றது. இங்கு, பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல், புதிய அனுமதி சீட்டு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சாலை போக்குவரத்து தொடர்பாக இரும்பு பலகைகளில் வாசகங்கள் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த விழிப்புணர்வு பலகைகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
எனவே, பலகைகளை சீரமைத்து அதில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு வாசங்கள் அச்சிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.