/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 04, 2024 11:42 PM
கடலுார் : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
மாநில பொது செயலாளர் சந்தானகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இதில் கடலுார் மாவட்டத்தில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு வருடாந்திர பொதுக்கலந்தாய்வு நடத்த வேண்டும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் ஓட்டுச்சாவடி செலவின தொகை, மீதமுள்ள ரூ.650 வீதம் உடனடியாக வழங்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் மதிப்பூதியம் வழங்கியது போல், லோக்சபா தேர்தலில் பணிபுரிந்தவர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, மாவட்ட பொருளாளர் செல்வம், இணை செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் ராஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கலெக்டர் அருண்தம்புராஜிடம், பொது கலந்தாய்வு நடத்தி கோரி மனு கொடுத்தனர்.