/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை உச்ச ம் காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை உச்ச ம்
காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை உச்ச ம்
காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை உச்ச ம்
காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை உச்ச ம்
ADDED : ஜூன் 04, 2024 05:07 AM
நெல்லிக்குப்பம், : காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டதால், வியாபாரம் டல் அடித்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை வாரச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு, அதிகளவு கருவாடு விற்பனைக்கு வருகிறது. அதேபோல் காய்கறிகள் விற்பனைக்காக 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் போடுகின்றனர். கருவாடு மற்றும் காய்கறிகள் வாங்க வாரந்தோறும் பல ஆயிரம் மக்கள் வருகின்றனர். நேற்று 50 லட்சம் ரூபாய்க்கு கருவாடு விற்பனையானது. அதே சமயத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டதால் வியாபாரம் டல் அடித்தது. நேற்று பீன்ஸ் கிலோ 200 க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் குறைந்த அளவுக்கு காய்கறிகள் வாங்கியதால் வியாபாரம் குறைந்து வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.