/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலா திருவிழா பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தினர் கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலா திருவிழா பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தினர்
கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலா திருவிழா பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தினர்
கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலா திருவிழா பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தினர்
கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலா திருவிழா பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தினர்
ADDED : ஜூன் 03, 2024 06:05 AM

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் நடந்த - பலா திருவிழாவில் ஆயிரக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலா தோப்பில் பலா திருவிழா நேற்று நடந்தது.
விழாவிற்கு ரமேஷ் கருப்பையா வரவேற்றார். புவனகிரி தாசில்தார் தனபதி, வேளாண் துணை இயக்குனர் எழுமலை, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலை பேராசிரியர் நடராஜன், மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசியர் பாஸ்கரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் ரவிசந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் அருண், வேளாண் வணிக துணை இயக்குனர் பூங்கோதை, நுண்ணீர் பாசன வேளாண் துணை இயக்குனர் செல்வம், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் லெனின், அறிவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து பேசினர்.
விழாவில் பலாவத்தல், பலாக்கொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலாபிரியாணி, பலாசாக்லெட், பலாச்சுளை ஐஸ்கீரிம் செய்முறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.
பலாவின் ரகங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. எழுத்தாளர் கண்மணி குணசேகரன், வேளாண் நடுவர் முருகன், பசுமை செயல்பாட்டாளர் அருள்செல்வம், வள்ளலார் பணியகம் பன்னீர்செல்வம், காகித மடிப்பு நிபுணர் சேகர். பனை உணவு வல்லுநர் அகிலாகுணாளன், பலா சாகுபடி ஜெயராமன், ராமசந்திரன், திமலை, ராமசாமி, மாணிக்கவாசகம், சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணிகண்டன் நன்றி கூறினார்.