/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சீருடை வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு சீருடை வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு
சீருடை வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு
சீருடை வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு
சீருடை வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 30, 2024 05:27 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 471 மாணவர்களுக்கு அரசின் இலவச சீருடை வழங்கப்படுவதாக, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச இணை சீருடைகள் வழங்கப்படுகிறது.
கடலுார் வேணு கோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவக்க விழாவில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலர் பழனி, தலைமை ஆசிரியை தனலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர்கள் கோபி பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் 1,708 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது.
2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 471 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் உறுப்பினர்கள் மூலம், பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று அளவெடுத்து சீருடைகள் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றார்.