/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அறிவிப்பில்லாத மின்தடை; விவசாயிகள் பாதிப்பு அறிவிப்பில்லாத மின்தடை; விவசாயிகள் பாதிப்பு
அறிவிப்பில்லாத மின்தடை; விவசாயிகள் பாதிப்பு
அறிவிப்பில்லாத மின்தடை; விவசாயிகள் பாதிப்பு
அறிவிப்பில்லாத மின்தடை; விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 08:53 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே முகந்தரியங்குப்பம் துணைமின் நிலைய கட்டுப்பாட்டில் பு.ஆதனுார், வீரமுடையாநத்தம், தட்டனோடை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, சாத்தப்பாடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள நிலையில் ஏராளமான போர்வெல் உள்ளது. அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் போர்வெல் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வீடுகளுக்கு செல்லும் மின்சாரத் தடையும் அவ்வப்போது ஏற்படுவதால் காலை நேரங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் குடிதண்ணீர் உள்ளிட்டவைகளுக்கு கடும் அவதிடைகின்றனர். மழை நேரங்களில் நீண்ட நேரம் வரையில் மின்தடை செய்யப்படுகிறது.
எனவே, மின்துறை உயரதிகாரிகள் அடிக்கடி மின்தடை செய்வதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.