Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 44 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்,பி., ராஜாராம் அதிரடி

44 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்,பி., ராஜாராம் அதிரடி

44 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்,பி., ராஜாராம் அதிரடி

44 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்,பி., ராஜாராம் அதிரடி

ADDED : ஜூலை 19, 2024 05:02 AM


Google News
பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில், 44 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.

கடலுார் கண்ட்ரோல் ரூம் ரவிச்சந்திரன் நெல்லிக்குப்பத்திற்கும், அங்கிருந்த சுகன்யா திட்டக்குடி மகளிர்போலீஸ் நிலையத்திற்கும், குறிஞ்சிப்பாடி வேல்குமார் தேவனாம்பட்டினத்திற்கும், ஸ்ரீ முஷ்ணம் ரவிச்சந்திரன்சேத்தியாத்தோப்பு, மாவட்ட குற்றப்பிரிவு சுப்ரமணியன் தேவனாம்பட்டினத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு அமலா புதுச்சத்திரத்திற்கும், திருப்பாதிரிபுலியூர் கணபதி திட்டக்குடிக்கும், அங்கிருந்த ஜம்புலிங்கம் விருத்தாசலம், கடலுார் கண்ட்ரோல் ரூம் முத்துக்கிருஷ்ணன் நெய்வேலி டவுன்ஷிப்பிற்கும்,அங்கிருந்த டைமன்துரை குறிஞ்சிப்பாடிக்கும், புதுச்சத்திரம் நந்தகோபால், மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.

சிதம்பரம் கலால் பொன்மகரம் கிள்ளைக்கும், வேப்பூர் பாக்கியராஜ் பெண்ணாடத்திற்கும், சிறுபாக்கம் ராஜாங்கம் வடலுாருக்கும், புத்துார் சண்முகம் மங்கலம்பேட்டைக்கும், புவனகிரி குமாரசாமி கடலுார் துறைமுகம், கடலுார் டவுன் கதிரவன் திருப்பாதிரிபுலியர், புதுப்பேட்டை ராஜேந்திரன் காடாம்புலியூருக்கும், முத்தாண்டிக்குப்பம் வெங்கடேசன் கடலுார் துறைமுகத்திற்கும், நெய்வேலி டவுன்ஷிப் வைத்தியநாதன் புதுப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

பரங்கிப்பேட்டை ரவிச்சந்திரன் சிதம்பரம் தாலுகாவிற்கும், புதுச்சத்திரம் எழிலரசி கடலுார் என்.டி.,க்கும், மங்கலம்பேட்டை ராமலிங்கம் கருவேப்பலங்குறிச்சிக்கும், சோழதரம் பாஸ்கரன் பரங்கிப்பேட்டைக்கும், சிதம்பரம்மகளிர் போலீஸ் நிலைய ஜரினா, நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சிதம்பரம்மகளிர் போலீஸ் நிலைய ஜெயதேவி, முத்தாண்டிக்குப்பத்திற்கும், திருப்பாதிரிபுலியூர் சீனிவாசன் ரெட்டிச்சாவடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, தேவனாம்பட்டிணம் கவியரசன் கடலுார் என்.டி.க்கும், ஆலடி அண்ணாமலை தேவனாம்பட்டிணத்திற்கும், கடலுார்வணிக புலனாய்வு பிரிவு பாஸ்கர், கண்ட்ரோல் ரூமிற்கும், கடலுார் முதுநகர் மாசிலாமணி புதுப்பேட்டைக்கும், புவனகிரி நடராஜன் புத்துாருக்கும், கடலுார் துறைமுகம் செல்வம், மாவட்ட குற்றப்பிரிவிற்கும், புத்துார் ஜெயசீலி சிதம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தேவனம்பட்டிணம் உத்தரம்மாள், துாக்கணாம்பாக்கத்திற்கும் மாற்றப்பட்டனர்.

நெய்வேலி டவுன்ஷிப் இளவரசி குமராட்சிக்கும், பண்ருட்டி ரவிச்சந்திரன் வேப்பூருக்கும், மாவட்ட குற்றப்பிரிவு கனகவள்ளி குள்ளஞ்சாவடிக்கும், வடலுார் சிவகுருநாதன் கடலுார் கலால், கிள்ளை சங்கர் சிதம்பரம் கலால், பெண்ணாடம் பிரகஷ்பதி விருத்தாசலம் கலால் என, 44 சப் இன்ஸ்பெக்டர்களை எஸ்.பி., ராஜாராம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us