/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குளத்தில் மூழ்கி குழந்தை சாவு விளையாடிய போது விபரீதம் குளத்தில் மூழ்கி குழந்தை சாவு விளையாடிய போது விபரீதம்
குளத்தில் மூழ்கி குழந்தை சாவு விளையாடிய போது விபரீதம்
குளத்தில் மூழ்கி குழந்தை சாவு விளையாடிய போது விபரீதம்
குளத்தில் மூழ்கி குழந்தை சாவு விளையாடிய போது விபரீதம்
ADDED : ஜூலை 09, 2024 08:04 PM
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில், வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த3 வயது குழந்தை, குளத்தில் மூழ்கி உயிரிழந்தது.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை குருநாத செட்டித்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், 37. இவரது, மகன் தர்ஷன்,3. நேற்று முன்தினம் வீட்டிற்கு பின்புறம் குழந்தை விளையாடியபோது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள குளத்தில் இறங்கியது.
அதில் தண்ணீரில் மூழ்கியதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று, குழந்தையை மீட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். பெற்றோர் அலட்சியத்தால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.