/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 09, 2024 11:45 PM
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் நாளை (11ம் தேதி) மற்றும் 12 ஆகிய தேதிகளில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் செய்திக்குறிப்பு;
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கடந்த ஜூன் 10 முதல் 16ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வும், ஜூன் 24 முதல் 28ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடந்தது. இதில், சில பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதால் நாளை (11ம் தேதி) மற்றும் 12 ஆகிய தேதிகளில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நாளை (11ம் தேதி) கட் ஆப் 400 மதிப்பெண்களில் இருந்து 250 வரை நடைபெறும். 12ம் தேதி கட் ஆப் 249 மதிப்பெண்களில் இருந்து 140 மதிப்பெண்கள் வரை நடைபெறும்.இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.