/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் அருகே ரவுடி அடித்து கொலை போலீஸ் வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு விருத்தாசலம் அருகே ரவுடி அடித்து கொலை போலீஸ் வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு
விருத்தாசலம் அருகே ரவுடி அடித்து கொலை போலீஸ் வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு
விருத்தாசலம் அருகே ரவுடி அடித்து கொலை போலீஸ் வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு
விருத்தாசலம் அருகே ரவுடி அடித்து கொலை போலீஸ் வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:45 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி, உறவினர்கள் போலீஸ் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மாத்துார் காலனியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் பாக்யராஜ்,40; ரவுடி. அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் மகன் கலைவாணன் (எ) ராம்கி,38; நண்பர்களான இருவரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில் ஒன்றாக மது குடித்தனர்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கலைவாணன், பீர் பாட்டிலால் பாக்யராஜ் தலையில் தாக்கினார். அதில், படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மறுநாள் காலை 11:50 மணிக்கு, அவரது உறவினர்கள் பாக்யராஜை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, கலைவாணனை கைது செய்தனர்.
இந்நிலையில், பாக்யராஜ், நேற்று காலை 9:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனை அறிந்த அவரது உறவினர்கள், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் வீட்டை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், அவரது மகன்கள் கலைவாணன், மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பாக்யராஜை அடித்து கொலை செய்துள்ளனர்.
ஆனால், கலைவாணனை மட்டும் கைது செய்துள்ளனர். சுப்ரமணியன், அவரது மற்றொரு மகனையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார், ஊராட்சித் தலைவர் சுப்ரமணியன், அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட உறவினர்களை ரோந்து வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த பாக்யராஜ் உறவினர்கள், போலீஸ் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
நீண்ட முயற்சிக்கு பின் போலீசார், ஊராட்சி தலைவர் குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். தொடர்ந்து மாத்துார் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.